Map Graph

மகாத்மா காந்தி பூங்கா

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு பூங்கா

மகாத்மா காந்தி பூங்கா இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் கொல்லம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பொதுப் பூங்கா ஆகும். உலகின் முந்திரி தலைநகர் எனப்படும் சின்னக்கடையிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொல்லம் நகரின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் இப்பூங்காவும் ஒன்றாகும். கொல்லம் மாநகராட்சி ஆணையத்திற்குச் சொந்தமான இந்தப் பூங்காவை, கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனம், பராமரிப்புக்காக ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் நடத்துகிறது. 'தி குயிலான் பீச்' என்ற ஐந்து நட்சத்திர விடுதி இந்த பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Entrance_of_Mahatma_Gandhi_Park,_Kollam.jpgபடிமம்:Mahatma_Gandhi_statue_in_Kollam.jpgபடிமம்:Commons-logo-2.svg